என் மனைவி பத்தி கேட்க வேண்டாம்; இதுதான் காரணம் - லோகேஷ் கனகராஜ் பளீச்!
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச விரும்பவில்லை என லேகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லேகேஷ் கனகராஜ்
கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் பணியாற்றியிருந்தார். தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் கமலுடைய மகள் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து காதல் பாடல் ஒன்றில் நடித்துள்ளார்.
'இனிமேல்' ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் கனகராஜை பார்த்ததுமே ரசிகர்கள் எப்படி இப்படியென கொதித்து விட்டனர். ஏனென்றால் அந்த அளவிற்கு நெருக்கமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தனிப்பட்ட வாழ்க்கை
இந்நிலையில், பாடல் வெளியீட்டு விழாவிற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளனர். அதில், இயக்குனராக உங்களை பார்த்த உங்கள் மனைவி, நடிகராக பார்க்கும் போது என்ன ரியாக்ஷன் பண்ணுவார்கள், என்ன சொல்வார்கள் என்ற கேள்விக்கு..
ஆரம்பத்தில் இருந்தே பொதுவாக என் தனிப்பட்ட கேள்விகளை ஒதுக்கி வருகிறேன். அதை பற்றி மட்டும் இனிமேல் பேச விரும்பவில்லை. ஏனென்றால், நான் சினிமாவிற்குள் வரும் போதே அது வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
எனக்கும் உங்களுக்குமான நேரடி தொடர்பு இருக்கனும் என்று நினைக்கிறேன். பாராட்டுவதாக இருந்தாலும் சரி, விமர்சிப்பதாக இருக்கட்டும் அதுவே போதும் என்று நினைக்கிறேன். என் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியக்கூடாது என்று உறுதியாக இருப்பதாக பதிலளித்துள்ளார்.