நிவாரண பணிக்கு வருமானத்தை தருவதாக சொல்லவில்லை; அது வதந்தி - தமிழ் தலைவாஸ் வீரர்
நிவாரணப்பணிக்கு தனது வருமானத்தை தருவதாக கூறிய செய்தி தவறு என தமிழ் தலைவாஸ் வீரர் முத்து தெரிவித்துள்ளார்.
மாசான முத்து
இந்தியாவில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் 10 வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று தனது பலத்தை காட்டி வருகின்றன.
இதில் தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் 10 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் வெற்றியும் 8 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இந்த அணி 14 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் பெய்த மழையினால் தென் மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
பரவிய வதந்தி
அதில், தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ள துத்துக்குடியை சேர்ந்த மாசான முத்துவின் வீடு இந்த வெள்ளத்தில் இடிந்தது. இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு தான் சம்பாதித்த 31.6 லட்சத்தை தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தருவதாக கூறியதாக செய்தி கடந்த சில நாட்களாக பரவி வந்தது.
இதற்கு தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் முத்து நிவாரண பணிக்காக தான் பணம் தருவாதாக கூறிய செய்தி வதந்தி. யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.