அடேங்கப்பா...வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப் பரிசு? மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

Government Of India Madhya Pradesh Election Lok Sabha Election 2024
By Swetha Apr 30, 2024 10:15 AM GMT
Report

வாக்குப்பதிவை அதிகரிக்க குலுக்கல் முறையில் வைர மோதிரம், லேப்டாப் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களித்தால் பரிசு 

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமானது 102 தொகுதிகளிலும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளிலும் நிறைவடைந்தது, ஆனால் அந்த தொகுதிகளில் பதிவான வாக்குகளின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தது.

அடேங்கப்பா...வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப் பரிசு? மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு! | Prizes For Voters To Increase Voting Percentage

இதன் காரணமாக வாக்காளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்களித்த அடையாளம் காட்டினால் இலவசமாக பீர், உணவு தருவாங்கலாம்! எங்கு தெரியுமா?

வாக்களித்த அடையாளம் காட்டினால் இலவசமாக பீர், உணவு தருவாங்கலாம்! எங்கு தெரியுமா?

அதிரடி அறிவிப்பு

நடப்பு போபால் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மொத்தமுள்ள 2097 வாக்குச்சாவடிகளிலும், தலா 3 பரிசுகள் வீதம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுகளை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அடேங்கப்பா...வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப் பரிசு? மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு! | Prizes For Voters To Increase Voting Percentage

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இதற்கென தனியாக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, வாக்களித்த பின்னர் குலுக்கல் டோக்கன்களை பூர்த்தி செய்து வாக்காளர்கள் பெட்டிகளில் போட வேண்டும். இதிலிருந்து 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். வாக்குப் பதிவு முடிந்ததும் பம்பர் குழுக்கள் நடைபெறும்.

அடேங்கப்பா...வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப் பரிசு? மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு! | Prizes For Voters To Increase Voting Percentage

குலுக்களில் வெற்றி பெறும் வாக்காளர்களுக்கு, வைர மோதிரம், லேப்டாப், டைனிங் டேபிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள தொழில்துறையினரோடு தேர்தல் ஆணையம் இணைந்து ஸ்பான்சர் மூலம் பரிசுகளை பெற்று வருகிறது. இந்த முடிவின்படி பலன் அளிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.