டி20 உலகக்கோப்பை - வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை பற்றிய விவரம்.
உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதியான இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.
மேலும், அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய குட்டி அணிகளும் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா- கனடா அணிகள் இன்று மோதுகின்றன.
பரிசுத்தொகை
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் மகுடம் சூடிய,
இங்கிலாந்து அணிக்கு ரூ.13 கோடியும், இரண்டாவது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூ.6½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்த முறையும் அதே பரிசுத்தொகை வழங்கப்படலாம் என்று தெரிகிறது.