பொது இடத்தில் ரசிகர்களால் பாலியல் தொல்லை - வேதனையில் குமுறும் பிரியங்கா மோகன்
நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் வரும் பொங்கலை முன்னிட்டு கேப்டன் மில்லர் படம் வெளியாகவுள்ளது.
பிரியங்கா மோகன்
தமிழ், தெலுங்கு என மாறிமாறி நடித்து நடித்து வரும் பிரியங்கா மோகன், தற்போது கேப்டன் மில்லர் படத்தை முடித்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார் என பலர் நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்ச்சியில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில், படத்தில் நடித்திருந்த அநேக நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சிக்கு முடிந்த பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில்,
துணை நடிகை ஐஸ்வர்யா ரகுபதிக்கு நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மதிக்க வேண்டும்...
இந்நிலையில், அது குறித்து நடிகை பிரியங்கா மோகன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு இருக்க வேண்டும். எல்லாரையும் மதிக்க வேண்டும்.
நமது வீட்டிலும் அம்மா, சகோதரிகள் உள்ளனர்,
அவர்களுக்கு மட்டும் ஏதாவது நடந்தால் சும்மா இருப்போமோ? ஆனால் நம்ப வேறொரு பெண்ணுக்கு தப்பான விஷயத்தை செய்யலாமா?" என்று பிரியங்கா மோகன் கூறியுள்ளார்.