விஜய்யுடன் முதல் படம்; வேண்டவே வேண்டாம்.. கதறி அழுத பாலிவுட் நடிகை - என்ன காரணம்?
தனது மகள் பிரியங்கா சோப்ரா குறித்து அவரது தாயார் மது சோப்ரா பேசியுள்ளார்.
தமிழன்
மஜித் இயக்கத்தில் விஜய், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தமிழன்'. இந்த படம் மூலம் தான் நடிகை பிரியங்கா சோப்ரா சினிமாவில் அறிமுகமானார்.

2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு அவருக்கு தமிழன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக பிரியங்கா சோப்ரா வளம் வருகிறார்.
அழுதுவிட்டாள்
இந்நிலையில் அவரது தாயார் மது சோப்ரா அளித்த பேட்டி ஒன்றில் "இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பிரியங்கா சோப்ராவிடம் கூறினேன். முதலில் அவள் அழுதுவிட்டாள்.

படத்தில் நடிக்க விரும்பவில்லை என்றும் கூறினாள். பின்னர், அந்த வாய்ப்பை ஏற்கும்படி நான் அவளிடம் பரிந்துரைத்தேன், அவள் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாள். அவள் உலக அழகி பட்டம் வென்ற பிறகு மாடலிங்கில் செல்ல விரும்பினாள்" என்று தெரிவித்துள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    