அந்த நடிகர் நன்றி கெட்டவரு .. கர்ப்பமா இருக்கும்போதே அத பண்ணியும்.. நடிகை சாந்தி பகீர்!
நடிகர் மோகன்லால் குறித்து நடிகை சாந்தி வில்லயம்ஸ் பேசியுள்ளார்.
நடிகை சாந்தி
வியத்நாம் வீடு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சாந்தி. குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் டிவி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். இவர் மெட்டி ஒலி, தென்றல், சித்தி, அண்ணாமலை, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
சாந்தி 1979-ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் ஜெ வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வில்லியம்ஸ் கடந்த 2005-ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சாந்தி நடிகர் மோகன்லால் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "மோகன்லாலுக்கு நிறைய சமச்சு குடுத்துருக்கேன்.
நன்றி இல்ல
ஆனால், அவருக்கு நன்றி இல்ல. என் கணவர் எடுத்த ஒரு படத்துல மோகன்லால் நடிச்சாரு. அப்போ நிறைய சாப்பாடு செஞ்சு குடுத்துருக்கோம். அவரே எங்க வீட்டுக்கு கேரியர் எடுத்துட்டு வந்து சாப்பாடு எடுத்துட்டு போவாரு.
ஆனால், என் புருஷன் செத்தப்போ இந்த மனுஷன் வரல. எனக்கு மோகன்லால புடிக்காது. ஏனா.. என் புருஷன் அவரவச்சு 4 படம் எடுத்துருக்காரு. நான் நிறைமாத கர்ப்பிணியா இருக்கும்போது என் நகையை அடமானம் வச்சு, நடக்க முடியாம நடந்து போய் அவருக்கு ரூ.60,000 குடுத்தேன். ஏர்போர்ட்டில் என்னை பார்த்து தலைதெறிக்க ஓடுனாரு. இவருக்கு என்னைக்குமே என்கிட்ட மரியாதை இல்ல. தப்பா நினைக்காதீங்க" என்று வேதனை தெரிவித்துள்ளார்.