பிள்ளை வேண்டும் என கேட்ட ரஜினி; ரூ.100 கோடி கொடுத்தாலும்.. போட்டுடைத்த பிரபல நடிகை!
நடிகை சாந்தி
வியத்நாம் வீடு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சாந்தி. குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் டிவி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார்.
இவர் மெட்டி ஒலி, தென்றல், சித்தி, அண்ணாமலை, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சாந்தி 1979-ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் ஜெ வில்லியம்ஸ் என்பவரை மணந்தார். வில்லியம்ஸ் கடந்த 2005-ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சாந்தி தனது கணவர் குறித்து பேசியுள்ளார்.
பேட்டி
அவர் கூறுகையில் "ஒரு முறை எனது கணவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கடைசி பையனை தூக்கிகிட்டு போனாரு. அப்போ ரஜினி சார் வந்து இவரிடம் பையனை அவருக்கு தத்து கொடுக்க சொல்லி கேட்டு இருக்கார்.
உனக்கு தான் 4 பிள்ளைங்க இருக்குல. எனக்கு ஆம்பள பசங்க இல்ல. எனக்கு தத்து குடுத்துடு அப்படினு சொல்லி இருக்காரு. அதற்கு 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் என்னோட பையனை குடுக்க முடியாது அப்படினு சொல்லிட்டு தூக்கிட்டு வந்துட்டாரு. வீட்டுக்கு வந்ததும் பையனை கேட்கிறான். நான் எப்படி என்னோட பையனை கொடுப்பேன் அப்படினு கம்பளைண்ட் பண்ணாரு" என்று பேசியுள்ளார்.