கல்யாணம் ஆகிடுச்சி'னு அப்படி நடிக்க கூடாதா என்ன..? பிரியாமணி ஓபன் டாக்
பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி.
பிரியாமணி
பின்னர், பருத்திவீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்று அசத்தினார். தொடர்ந்து அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க துவங்கிய பிரியாமணி கிளாமர் கதாபாத்திரங்களின் பக்கம் சென்றார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முஸ்தாபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியாமணி, அண்மையில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திருமணமான பின்பு நடிகைகளுக்கு பெரும்பாலும் கதாநாயகி கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரியாமணி.
அந்தப் பேட்டியில், "திருமணம் நடந்துவிட்டால் ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள் என்பதெல்லாம் தற்போதில்லை என்று கூறி, திருமணமான நடிகை என்றாலே கதாநாயகியாக நடிக்க தகுதி இல்லை என்கிற எண்ணம் நிலவிவந்தது என்றும் கூறினார்.
ஆனால், இப்பொது அதுபோன்ற நிலை என்ற அவர், தான் தொடர்ந்து பிசியாக நடித்து வருவதாக குறிப்பிட்டு, பல திருமணமான நடிகைகள் தற்போது பிஸியாக தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.