Wednesday, May 28, 2025

என்னை ஆன்ட்டின்னு கூப்பிடணுமா? தாராளமா பண்ணுங்க, ஆனால்.. - பிரியா மணி நச் பதிலடி!

Priyamani
By Sumathi 2 years ago
Report

பிரியாமணி தன்னுடைய உடல் குறித்த கமெண்டுகள் பற்றி மனம் திறந்துள்ளார்.

பிரியாமணி

நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2017ல் முஸ்தாபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

என்னை ஆன்ட்டின்னு கூப்பிடணுமா? தாராளமா பண்ணுங்க, ஆனால்.. - பிரியா மணி நச் பதிலடி! | Priyamani About Weight Loss Body Shame

இந்நிலையில், பாடி ஷேமிங் குறித்து பேசியுள்ள பிரியாமணி, ஒரு படத்திற்காக நான் எடையை குறைத்தால், நீங்கள் அதிகமாக எடையை குறைத்து விட்டீர்கள் என்று பேசுவார்கள்.

பாடி ஷேமிங்

எடையை கூட்டினால் நீங்கள் அதிகமாக எடையை கூட்டி விட்டீர்களே என்று பேசுவார்கள். நான் எனக்கு வரும் கமெண்டுகளை படிக்க மாட்டேன் என்று சொல்லமாட்டேன். நிச்சயமாக அந்த கமெண்ட்களை எல்லாம் படிப்பேன்.

என்னை ஆன்ட்டின்னு கூப்பிடணுமா? தாராளமா பண்ணுங்க, ஆனால்.. - பிரியா மணி நச் பதிலடி! | Priyamani About Weight Loss Body Shame

ஆனால் அவர்களுக்கு பதில் அளித்து நான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. என்னை ஆன்ட்டி என்று கூப்பிட வேண்டுமா? தாராளமாக கூப்பிடுங்கள். ஒரு பிரச்சனையும் கிடையாது. நாளை நீங்களும் இதே போன்ற ஒரு வயோதிக நிலையை அடையத்தான் போகிறீர்கள்.

நான் இந்த இடத்தில் மிகவும் பெருமையாக சொல்கிறேன் எனக்கு 39 வயது ஆகிறது என்று. அடுத்த வருடம் நான் என்னுடைய 40 - தை தொட இருக்கிறேன். இன்றும் நான் ஹாட்டாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.