முத்தம் கொடுக்கமாட்டேன்; அவருக்கு யார் பதில் சொல்றது - பிரியாமணி ஆதங்கம்!
சக நடிகர்களுக்கு முத்தம் கொடுக்கமாட்டேன் என நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.
பிரியாமணி
நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் பருத்தி வீரன் திரைப்படம் மூலம் ஸ்டார் நடிகை அந்தஸ்தைப் பெற்றார். தேசிய விருது கிடைத்த அந்தப் படத்துக்குப் பிறகு பிரியா மணிக்கு படங்கள் வரிசையாக வந்தது.
2017ல் முஸ்தாபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதன்பின், சில ஆண்டுகள் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் திரையில் யாருக்கும் முத்தம் கொடுக்க மாட்டேன்.
அதில் சங்கடம்
அதற்கு என்னிடம் அனுமதி கிடையாது. அது வெறும் சாதரண கதாபாத்திரம்தான் என்றும் அது என்னுடைய வேலை என்றும் எனக்குத் தெரியும். பிற நடிகர்களுக்கு முத்தம் கொடுப்பதில் சங்கடத்தை உணர்கிறேன். அதற்கான காரணம் நான் வீட்டில் என்னுடைய கணவருக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
அது என்னுடைய பொறுப்பு என்றும் உணருகிறேன். நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டு பழகிய போது பிற நடிகர்களை முத்தம் கொடுப்பது போன்றதொரு ரோல்கள் எதுவும் பெரிதாக வரவில்லை. ஒருவேளை அதை செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு நான் அதை செய்தால் அது குறித்து கணவரிடம் மோசமானதாக உணர்வதாக கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.