உங்க ட்ரெஸ் சைஸ் என்ன? கமல் படத்தில் நடிக்க இப்படித்தான் கேட்டாங்க - பிரியதர்ஷினி
விக்ரம் படத்தில் நடிக்க என்னோட சைஸ் கேட்டாங்க என பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
பிரியதர்ஷினி ராஜ்குமார்
தமிழில் அச்சம் என்பது மடமையடா, கவண், ரெமோ, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் பிரியதர்ஷினி ராஜ்குமார் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில்,

கமல்ஹாசன் நடித்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி நான் போகவில்லை. ஆனால், என்னை தேடி அந்த வாய்ப்பு கிடைத்தது.
பழைய விக்ரம் படத்தில் நடித்ததை போல கமல்ஹாசன் சாருடன் மென் இன் பிளாக் படத்தில் வருவது போல கோட் சூட் எல்லாம் போட்டுக் கொண்டு கன் வைத்து நிற்பேன் என கனவுக் கண்டேன். ஆனால், கிடைத்ததோ விபச்சார விடுதி மேனேஜர் ரோல் தான்.
விக்ரம் படம்
அது கிடைத்ததை பெரிய விஷயமாகவே கருதுகிறேன். லோகேஷ் டீமில் இருந்து எனக்கு முதலில் கால் வரவில்லை. அதற்கு முன்னதாக காஸ்ட்யூம் டீமில் இருந்து பேசுகிறோம் உங்க டிரெஸ் சைஸ் என்ன சொல்லுங்க எனக் கேட்டனர். நான் உடனே ஷாக் ஆகிட்டேன், படக்குழுவில் இருந்து யாருமே என்னிடம் பேசவில்லையே என்றேன்.

ராஜ்கமல் டீமில் இருந்து பேசுவார்கள், எங்களுக்கு உங்க டீட்டெய்ல்ஸ் வந்துடுச்சு, அதான் கேட்டோம் என்றார்கள். அதன் பின்னர் என் டிரெஸ் அளவு எல்லாம் கொடுத்தேன்.
ஆனால், அந்த படத்தில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை அதுதான் வருத்தம் எனத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil