டிடி 2வது திருமணம் - ரகசியம் உடைத்த சகோதரி பிரியதர்ஷினி!

Dhivyadharshini Marriage
By Sumathi 2 மாதங்கள் முன்
Report

டிடியின் திருமண வதந்தி குறித்து அவரது சகோதரி பிரியதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார்.

டிடி திருமணம்

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது.

டிடி 2வது திருமணம் - ரகசியம் உடைத்த சகோதரி பிரியதர்ஷினி! | Priyadarshini About Dds Second Marriage

தற்போது வாரநிகழ்ச்சிகளையும் முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். தான் தொகுப்பாளினியாக மட்டும் அல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவான காஃபி வித் காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சகோதரி விளக்கம்

டிடிக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் தற்போது அவர் 2வது திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவியது. அதனைத்தொடர்ந்து அவரது சகோதரி பிரியதர்ஷினி, டிடியை பற்றி பரவி வரும் செய்தியை பார்த்து நாங்களும் டிடியிடம் யார் அந்த தொழிலதிபர் என்று கேட்டோம்.

டிடி 2வது திருமணம் - ரகசியம் உடைத்த சகோதரி பிரியதர்ஷினி! | Priyadarshini About Dds Second Marriage

அதற்கு டிடி எனக்கே தெரியவில்லை என்று கூறிவிட்டாள், பொதுவாக இந்த மாதிரி வதந்திகள் வருவது அடிக்கடி நடப்பது தான். அதை நாங்கள் கண்டு கொள்வதே இல்லை. டிடி எப்போதும் அவளுடைய வாழ்க்கையில் வேலையில் தான் கவனமாக இருக்கிறார் .இப்போ வரைக்கும் டிடி இரண்டாவது திருமணத்தை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

நாங்கள் எதுவும் கேட்டாலும் அவள் சிரிப்பை மட்டும் தான் எப்போதும் போல எங்களுக்கு பதில் அளிப்பார். ஆனால் நாங்கள் அந்த வதந்திகளை கண்டு கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளார்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.