தனுஷ்தான் எனக்கு எப்பவும் க்ரஷ்... தூண்டில் போட்ட பிரபல இளம் நடிகை!
தனுஷ்தான் அவரது க்ரஷ் என பிரியா வாரியர் மனம் திறந்துள்ளார்.
பிரியா வாரியர்
'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலரே பூவி' என்ற பாடலில் நடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 70 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலேவார்ஸ் இருந்தனர்.
ஆனால் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அவர் விலகி விட்டார். இந்நிலையில், சமீபத்தில் பிரியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஃபிலிம் பேர் விருது விழாவில் கலந்துகொண்டது பற்றியும்,
தனுஷ் மீது க்ரஷ்
சிவப்பு கம்பளே வரவேற்பில் பங்கேற்றது குறித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், தனுஷ் குறித்து கேட்டதற்கு, அவர்தான் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட், தனுஷ் மீது எனக்கு அதிகமான கிரஷ் உள்ளது.
தனுஷுடன் சேர்ந்து நடிப்பதே தனது விருப்பம். அவரின் 'தி கிரே மேன்', 'திருச்சிற்றம்பலம்' படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்போது பிரியா வாரியர் கன்னடத்தில் விஷ்ணு பிரியா படத்திலும், இந்தியில் 3 படங்களிலும் நடித்து வருகிறார்.