வீட்டு விசேஷத்தில் மகன்களுடன் நடிகர் தனுஷ் - தனிமையின் தவிப்பில் ஐஸ்வர்யா...!
நடிகர் தனுஷ் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் தனது குடும்பத்தினருடன், மகன்களுடன் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை வீட்டு விசேஷம்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரையுலகில் பிரபல துணை நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யுலேகா ராமன்.
2012 ஆம் ஆண்டு வெளியான நீதான எந்தன் பொன்வசந்தம் என திரைப்படத்தின் மூலம் நடிக்க வந்த வித்யுலேகா ராமன் தொடர்ந்து தீயா வேலை செய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, மாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3-வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.
விசேஷத்தில் தனுஷ் குடும்பம்
இந்த நிலையில் நடிகை வித்யூலேகா ராமன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ், செல்வராகவன், பிரசன்னா, சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி வித்யூலேகாவின் உறவினராம். இதையடுத்து வித்யூலேகா ராமன் வீட்டின் விசேஷத்தில் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர் தனுஷின் குடும்பம்.
இந்நிகழ்ச்சியின் போது தனுஷ்,செல்வராகவன், சினேகா, பிரசன்னாவுடன் எடுத்த புகைப்படங்கள் வித்யூலேகா ராமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்தார். இந்த நிலையில் அவர்களின் அந்த அறிவிப்பு அவர்களின் குடும்பத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மகன்களுடன் தனுஷ்
இதையடுத்து தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வரும் தனுஷ் தனது மகன்களை மட்டும் தன்னுடன் அவப்போது அழைத்துக் கொண்டு செல்கிறார்.
நடிகர் தனுஷ் தனது அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, இரண்டு மகன்களுடன் சேர்ந்து குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த புகைப்படத்தில் தனது இரண்டு மகன்களுடன் தனது குடும்பமே உள்ள நிலையில் ஐஸ்வர்யா மட்டும் இல்லாமல் தனுஷ் தனித்து நிற்கிறார்.