2 திருமணம், 2 விவாகரத்து; ரஞ்சித் வாழ்க்கையில் ட்விஸ்ட் - நடிகை பிரியா ராமன்
நடிகர் ரஞ்சித் குறித்து நடிகை பிரியா ராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஞ்சித்
தமிழில் பொன்விலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். தொடர்ந்து சிந்து நதி பூ,மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா படத்தில் நடித்தார். மறுமலர்ச்சி படத்தில் வில்லனாக நடித்தார்.

நேசம் புதுசு என்ற படத்தில் நடிகை பிரியா ராமனுடன் சேர்ந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
அதன்பின், ரஞ்சித் சீரியல் நடிகை ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த மணவாழ்க்கையும் ஒரே ஆண்டில் முடிந்துபோனது. பல ஆண்டுகள் தனிமையில் இருந்த அவர், மீண்டும் தனது முதல் மனைவியான நடிகை பிரியா ராமனுடன் சேர்ந்தார்.
பிரியா ராமன் தகவல்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரியா ராமன், "பிக்பாஸில் ரஞ்சித் கலந்துகொள்வது என்பது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நிகழ்ச்சியின் தொடக்க விழாவின்போது ஒரு இளம் ஜோடிக்கு எங்களால் நல்லது ஒன்று நடக்க வேண்டியதிருந்தது.

அப்போது எங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் அந்த ஜோடியுடன் இருக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால்தான் தொடக்க விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. ரஞ்சித் ரொம்பவே இளகிய மனதுக்காரர். வெளியில் எப்படி இருக்கிறாரோ அதேபோல்தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இருக்கிறார்.
அவர் அங்கு நடிக்கவே இல்லை. ஏனெனில் நிஜ வாழ்க்கையில் அவரால் நடிக்கவே முடியாது. இன்னும் சில வருடங்கள் கழித்து அவரை பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் புரிந்துகொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil