ஆஹா என்ன இது..நம்ம சென்னை மேயர் ப்ரியாவா இது? - அடையாளமே தெரியலையே..!

DMK Chennai Italy
By Thahir Jun 20, 2023 09:16 AM GMT
Report

சென்னை மேயர் ப்ரியா இத்தாலியில் பங்கேற்று ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளது.

இத்தாலியில் மேயர் ப்ரியா 

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை போன்ற வளர்ந்து கொண்டே வரும் பெருநகரங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை ஒரு பெரிய சவாலாகவே விளங்கி வருகிறது.

வளர்ந்த நாடுகளில் திடக்கழிவு மேலாண்மையை எப்படி செயல்படுத்துகின்றனர் என்று பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு மேயர் ப்ரியா இன்று ரோம் நகரில் இத்தாலி நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் டாட் கோராடோ கிளினி (Mr.Dott Corrado Clini) சந்தித்து காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடினார்.

Priya Rajan in Italy - photo goes viral

இந்த சந்திப்பின் போது மதிப்பிற்குரிய துணை மேயர். மகேஷ் குமார்கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத் இ.ஆ.ப., மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Priya Rajan in Italy - photo goes viral

அதன்பின் அவர்கள் ரோம் நகரில் உள்ள உர்பேசர் கழிவு சேகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகளை பார்வையிட்டனர், என்று குறிப்பிட்டு உள்ளனர்.

Priya Rajan in Italy - photo goes viral

சென்னை வாசிகளே உஷார் 

மாடர்ன் உடையில் மேயர் ப்ரியா அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருப்பது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சென்னை சாலையில் குப்பை போடுபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

சாலையில் குப்பை போட கூடாது. குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும். வீட்டில் இருக்கும் குப்பைகளை காலையில் வரும் மாநகராட்சி குப்பை வண்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

வெளியே பொது இடங்களில் வீச கூடாது என்று சென்னை மாநகராட்சி கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக அதிகாரிகளை நியமித்து குப்பை போடுபவர்களையும், விதிகளை மீறுபவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.