முதலமைச்சரின் கான்வாயில் தொங்கிய படி சென்ற மேயர் பிரியா

M K Stalin Chennai Mandous Cyclone
By Thahir Dec 10, 2022 05:02 PM GMT
Report

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.அப்போது சென்னை மேயர் பிரியா அவர் சென்ற கான்வாயில் தொங்கிய படி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் கான்வாயில் தொங்கிய மேயர் 

தென்சென்னையில் புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

Mayor Priya went to hang on to the Chief Minister

பின்னர் சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதமடைந்த படகுகளைப் பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

[AD2VW4\]

இந்நிலையில், அங்கு செல்லும்போது சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூகவளைத்தலத்தில் வைரலாகி வருகிறது.