ஃபோட்டோ போட்டா அவங்களோட போயிடுவேனா? பிரியா பவானி சங்கர் கொந்தளிப்பு!
வதந்திகளுக்கு பிரியா பவானி சங்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாத்துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இதனையடுத்து, ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இதனையடுத்து மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசட தபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 மற்றும் டிமாண்டி காலனி 2 படங்களில் நடித்து வருகிறார்.
வதந்திக்கு பதிலடி
அடுத்த வாரம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிரியா பவானி பிஸியாக உள்ளார். அதில் பேசிய அவர், ஹேப்பி பர்த்டே போஸ்ட் போட்டாலே போதும் எனக்கும் அந்த நடிகருக்கும் இடையே காதல் என கிசுகிசு எழுதிடுறாங்க.
ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வன் எல்லாம் என்னோட நல்ல நண்பர்கள். நல்லவேளை அவங்களுக்கு எல்லாம் மேரேஜ் ஆகிடுச்சு. போட்டோ போட்டாலே போயிடுவேன்னு எப்படித்தான் நினைக்கிறாங்களோ, ரொம்பவே மோசமான கமெண்ட்டுகளை போடுறாங்க மனசு தாங்க மாட்டுது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
