மகளிருக்கு குட் நியூஸ்... பத்திரப்பதிவில் சலுகை, தமிழக அரசின் சூப்பர் திட்டம்!
தமிழக அரசு பத்திரப்பதிவில் மகளிருக்கு சலுகை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோரிக்கை
தமிழகத்தில் சொத்துக்கள் வாங்கும்போது, அதற்கான மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். மத்திய அரசு பரிந்துரை அடிப்படையில், சொத்து விற்பனை பதிவுக்கான முத்திரை தீர்வையை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் பயன் பெரும் வகையிலான பல திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்து வருகிறார். தற்பொழுது மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் சொத்து வாங்கும் மகளிருக்கு பத்திரப்பதிவில் சலுகை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு ஆலோசனை
இந்நிலையில், அரசு வட்டாரங்களில், “தமிழகத்தில் அதிகமாக உள்ள சொத்து விற்பனைக்கான பத்திரப்பதிவு கட்டணம், முத்திரை தீர்வையை குறைக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம், மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கான தீர்வை, கட்டணங்களை குறைத்தால், அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
மகளிருக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இதனால் பத்திப்பதிவும் அதிகரிக்கும். இந்த சலுகை, ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ளது. தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.