வழக்கம்போல் செயல்படும் தனியார் பள்ளிகள்... மீறினால் கடும் நடவடிக்கை!
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்புக்கு பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.
தமிழக பள்ளிகள்
தமிழகத்தில் பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சின்ன சேலம் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி, மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து,
பள்ளி கல்வித்துறை
தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இன்று பள்ளிகள் இயங்காது என அறிவித்தன. இதற்கு தடை விதித்துள்ள தமிழக பள்ளி கல்வித்துறை,

தமிழ்நாட்டில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எஎன்றும், தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 13ஆம் தேதி அதிகாலையில்,
பெரும் கலவரம்
பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவி ஸ்ரீமதி குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது உடற்கூராய்வுயில் சந்தேகத்திற்குரிய காயங்கள் இருப்பதால்,
மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர்.