கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்..!

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Jul 17, 2022 04:10 PM GMT
Report

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கலவரமாக மாறிய போராட்டம்

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்..! | School Student Death Issue Changed Cbcid

இதில் காவல்துறையினர் மீது கல்வீச்சு காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர் .

மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ள்ளிட்ட தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடைபெற்ற பள்ளி வளாகத்தில் உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்..! | School Student Death Issue Changed Cbcid

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு," மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட்டுள்ளது" என்றார்.