மீண்டும் உயரும் பால் விலை; லிட்டருக்கு இவ்வளவா? ஷாக் தகவல்!
பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளன.
தனியார் பால் நிறுவனம்
தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தனியார் பால் நிறுவனங்கள் இந்த மாதம் முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தியது.
இந்நிலையில், சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை ஆந்திராவை சேர்ந்த திருமலா நிறுவனம் நாளை (1-ந்தேதி) பால் விலையை உயர்த்துகிறது. மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது. லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்வு
அதன்படி நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 1லிட்டர் பாக்கெட் 70.00ரூபாயில் இருந்து 72.00ரூபாயாகவும், 500மிலி பாக்கெட் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 1லிட்டர் பாக்கெட் 62..00ரூபாயில் இருந்து 64.00ரூபாயாகவும், 500மிலி பாக்கெட் 32.00ரூபாயில் இருந்து 33.00ரூபாயாகவும்,
சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 1லிட்டர் பாக்கெட் 61.00ரூபாயில் இருந்து 62.00ரூபாயாகவும், 500மிலி பால் பாக்கெட் 27.00ரூபாயில் இருந்து 28.00ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட தயிர் (Toned Curd) 1கிலோ பாக்கெட் 70.00ரூபாயில் இருந்து 72.00ரூபாயாகவும், 450கிராம் பாக்கெட் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும்,
இருமுறை சமன்படுத்தப்பட்ட தயிர் (Double Toned Curd) 1கிலோ பாக்கெட் 68.00ரூபாயில் இருந்து 70.00ரூபாயாகவும், 450கிராம் பாக்கெட் 33.00ரூபாயில் இருந்து 35.00ரூபாயாகவும் விற்பனை விலை மாற்றமடைகிறது. இதனைத் தொடர்ந்து தனியார் பால் விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.