கடனை திருப்பி கேட்ட ஊழியர்கள் - வடிவேலு பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!
மார்த்தாண்டம் அருகே தவணை தொகையைக் கேட்டதால் இளைஞர் குளத்தில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார்த்தாண்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அருமனை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்றுள்ளார்.
அதன் மூலம் புதிய இருசக்கர வாகனத்தை தவணை முறையில் வாங்கியுள்ளார் . ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைத் தவணை தொகை கட்ட வேண்டும். ஆனால் அவர் சரியாகத் தவணை தொகையைச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நேற்று மாலை மார்த்தாண்டம் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை ஊழியர்கள் சிலர் தவணை தொகை கட்டாதவரின் இருசக்கர வாகனத்தினை எடுப்பதற்காக அந்த பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கடனாளி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதிர்ச்சி
மேலும் கடன் வாங்கிய அந்த இளைஞர், தவணை தொகை கேட்டு நிதி நிறுவனத்தினரை ஆவேசத்துடன் துரத்தியதாகத் தெரிகிறது. இதனைச் சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் அருமனை சந்திப்பை அடுத்துள்ள நெடுங்குளம் சந்திப்பு வழியாக ஓடும் போது அங்குள்ள குளத்தில் குதித்திருக்கிறார்.
அவருடன் நிறுவன ஊழியர்களும் குதித்துள்ளனர். அப்போது அந்த குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் அதிகம் இருந்ததால் கடன் நிறுவன ஊழியர் சிக்கித் தவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆகாயத் தாமரை செடிகளுக்கு இடையே சிக்கித் தவித்த இளைஞர் மீட்டனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.