பாலியல் புகார் - காணாமல் போன இந்திய கிரிக்கெட் வீரர்!
சர்ச்சைகளில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்.
பாலியல் புகார்
கடந்த 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து 2023ல் மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியில் பிரித்வி ஷா தனது நண்பருடன் சென்றார். அங்கு சப்னா கில் என்ற இளம்பெண் தனது நண்பர் ஷோபித் தாகூர் உள்ளிட்ட சிலருடன் வந்திருந்தார்.
அப்போது, பிரித்வியுடன் செல்ஃபி எடுப்பது தொடர்பாக இரு தரப்பிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்தக் கும்பல் பிரித்வி ஷாவை துரத்திச் சென்று 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
சிக்கிய வீரர்
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சப்னா மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தது. பின் ஜாமினில் வெளியே வந்த சப்னா, கேளிக்கை விடுதியில் பிரித்வி ஷா தான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்தார்.
இது தொடர்பான விசாரணையில் உரிய விளக்கம் அளிக்க செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவருக்கு 100 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
மேலும், அடுத்த விசாரணையில் பிரித்வி ஷா பதிலளிக்க கெடு விதித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகின்ற டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.