மொதல்ல தோனி போனை எடுத்தாரா? மனோஜ் திவாரி கிண்டல் - ஏன் தெரியுமா?
முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தோனியை கிண்டலடித்துள்ளார்.
பிசிசிஐ அழைப்பு
டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் தோனியை நம்பிக்கை ஆலோசகராக நியமிக்க பிசிசிஐ அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, “இதற்கு காலம்தான் பதில் சொல்லும். அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலில் அவர் போனை எடுத்தாரா? ஏனெனில், அவரை போனில் தொடர்பு கொள்வது கடினம்.
மனோஜ் திவாரி கிண்டல்
அவரிடமிருந்து செய்திகளுக்கு பதில் வருவதும் மிகவும் அரிது; பல வீரர்கள் இதை கூறியுள்ளனர். அவர் செய்தியை படிப்பாரா இல்லையா? என்பது நமக்கு தெரியாது. முதல் விஷயம், அவர் இந்த பொறுப்பை ஏற்பாரா இல்லையா என்பதுதான்.
அவர் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை கணிப்பது மிகவும் கடினம். ஒரு கேப்டனாகவும், வீரராகவும் அவரது அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இன்று வளர்ந்து வரும் புதிய வீரர்களும்,
வரவிருக்கும் நட்சத்திரங்களும் அவரை மிகவும் மதிக்கின்றனர். எம்.எஸ். தோனி மற்றும் கவுதம் கம்பீரின் ஜோடி பார்க்கத் தகுந்ததாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.