வெறுப்பேற்றிய திக்வேஷ்; ஆக்ரோஷமான நித்திஷ் - நிர்வாகம் கடும் நடவடிக்கை!
2 கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் அபராதம் விதித்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லி பிரிமியர் லீக்
டெல்லி கிரிக்கெட் சங்கத்தால் டெல்லி பிரிமியர் லீக் போட்டிகள் தலைநகரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இதில் இடம் பெற்றுள்ள பெஸ்ட் டெல்லி லயன்ஸ் மற்றும் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார் அணிகள் மோதின.
அப்போது லயன்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நித்திஷ் ரானா களத்தில் இருந்தார். எதிர்முனையில் பந்து வீசிய சவுத் ஸ்டார்ஸ் அணியின் விக்னேஷ் ரதி பந்து வீச வந்து கடைசி நேரத்தில் விலகினார்.
கடும் அபராதம்
அடுத்து அவர் பந்து வந்தபோது நித்திஷ்ரானா அதனை விளையாடாமல் விலகினார். இதன் பின்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
It’s all happening here! 🔥🏏
— Delhi Premier League T20 (@DelhiPLT20) August 29, 2025
Nitish Rana | Digvesh Singh Rathi | West Delhi Lions | South Delhi Superstarz | #DPL #DPL2025 #AdaniDPL2025 #Delhi pic.twitter.com/OfDZQGhOlr
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நித்திஷ் ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீத அபராதமும் விக்னேஷ் ரதிக்கு 80 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.