Friday, Mar 7, 2025

மாதம் ரூ.1000: இவர்களுக்கு தான் முன்னுரிமை - சட்டசபையில் வாக்குவாதம்

V. Senthil Balaji Tamil nadu DMK Vanathi Srinivasan
By Sumathi 2 years ago
Report

உரிமை தொகை முன்னுரிமை வழங்குவது குறித்து எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

உரிமை தொகை

குடும்பத்தலைவிகளுக்கு 'மகளிர் உரிமைத்தொகை' மாதம் ரூ.1000 திட்டம் வரும் செப்டம்பர் முதல் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

மாதம் ரூ.1000: இவர்களுக்கு தான் முன்னுரிமை - சட்டசபையில் வாக்குவாதம் | Priority Monthly Income Scheme Women In Tamil Nadu

இந்நிலையில், சட்டசபையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமை தொகையான 1000 ஆயிரம் குறித்து எனக்கொரு யோசனை உள்ளது.

வானதி சீனிவாசன் கேள்வி

அதிகம் மது குடிப்பவர்களின் மனைவிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை உறுதி செய்யலாம். மதுக்கடைகளில் மது வாங்குபவர்களுக்கு ஆதார் என்னை கட்டாயமாக்க வேண்டும். அப்படி வழங்கினால் யார் அதிகமாக மது வாங்குகிறார்கள் என்பது தெரிந்து விடும்.

மாதம் ரூ.1000: இவர்களுக்கு தான் முன்னுரிமை - சட்டசபையில் வாக்குவாதம் | Priority Monthly Income Scheme Women In Tamil Nadu

தமிழகத்தில்தான் அதிக விதவைகள் உள்ளனர். இதற்கு மதுக்கடைகள்தான் காரணம் என்று கூறினார். அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரப் பிரதேசம், கர்நாடகாவிலும் மதுக்கடைகள் மூலம் வருவாய் வருகிறது.

தமிழகத்தில் மது விலை அதிகமாக இருப்பதால் விற்பனை அதிகமாக உள்ளது என தெரிவித்தார். சட்டசபையில் வானதி சீனிவாசனைன் மது கடை குறித்த பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.