கடன்தான் அதிகமாகியிருக்கு..இப்போதைக்கு புதிய திட்டத்திற்கு வாய்ப்பில்லை - நிதியமைச்சர் புலம்பல்
கடன் சுமை அதிகரித்துள்ளதால், இப்போதைக்கு புது திட்டங்கள் இல்லை என நிதியமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோரிக்கைகள்
பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியுள்ளதை ஒட்டி, திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மேலும், அதில் பேசிய எம்எல்ஏக்கள், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம், அங்கன்வாடி, சத்துணவு, போக்குவரத்து, ரேஷன் கடைகளில் காலியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
நிதியமைச்சர் பதில்
இதற்கு பதிலளித்துள்ள நிதி அமைச்சர் தியாகராஜன், வரி வருவாய் அதிகரித்தாலும், தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. நிதி நிலைமையை சரி செய்து, குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம்.
ஏற்கனவே, பல நலத் திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.
இனி, அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களை உருவாக்குவதுதான் என் பணியாக இருக்கும். அறிவித்த பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதே கடினமாக இருக்கும்போது, இப்போதைக்கு புதிய திட்டங்களுக்கு வாய்ப்பு இல்லை. எனவே, சட்டசபையில் புதிய திட்டங்களை கேட்டு, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.