ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்; பரபரப்பாகும் அரசியல் வட்டாரம் - ஒருவர் கைது!
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துவர் கைது.
கொலை மிரட்டல்
இரவு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைசம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர் நேற்று நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்தார்கள்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ்,
மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 22 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறனர்.
ஒருவர் கைது
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவோம் எனவும்,
அவரது குடும்பத்தினரைக் குண்டுவீசி கொலை செய்துவிடுவதாகவும் கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தியதில் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரியும் சதீஷ் என்பவர் மிரட்டல் விடுத்ததாக தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கொலை மிரட்டலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக சதீஷ் பணிபுரியும் பள்ளியின் தாளாளர் அருண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.