இளவரசி கேட் குறித்து வெளியான முக்கிய தகவல் - தற்போதைய நிலை?
இளவரசி கேட் மிடில்டன் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கேட் மிடில்டன்
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன். திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இளவரசி கேத் மிடில்டன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து, வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தொடர்ந்து, பொதுமக்கள் உடன் நெருக்கம் காண்பிக்க கூடிய கேட் சமீப காலமாக எங்கும் தோன்றாமல் இருக்கிறார்.
அதன்பின் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். பாதிப்பிற்கு பிறகு முதல்முறையாக அரச படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில் கேட் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
புற்றுநோய் சிகிச்சை
அதில், தான் மேற்கொண்டுவரும் சிகிச்சையால் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முழுமையாக குணமடையவில்லை. வாழ்க்கையில் நல்ல நாட்களையும் மோசமான நாட்களையும் எதிர்கொள்ள வேண்டும். புற்றுநோய் சிகிச்சை பல மாதங்கள் நீடிக்கும்.
The Princess of Wales’ statement will be especially meaningful to those who are fighting cancer and for their families.
— Rishi Sunak (@RishiSunak) June 14, 2024
They will recognise the same struggle in her words and draw hope and inspiration from her strength.
I'm delighted she will be in attendance for His Majesty's… https://t.co/RBAtvtBjtn
இந்த வார இறுதியில் நடைபெறும் மன்னரின் பிறந்தநாள் அணிவகுப்பிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று காத்திருப்பதாகவும், வருங்காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க வேண்டும் என்று எனது குடும்பத்தினரும் விரும்புகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், வேல்ஸ் இளவரசியின் பேச்சு, ஒட்டுமொத்தமாக புற்றுநோயால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளது.
அவரது வார்த்தைகளில், போராட்டமும், அதேநேரத்தில நம்பிக்கை மற்றும் அவரது வலிமையும் வெளிப்படுகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.