ஏலத்திற்கு வரும் இளவரசி டயானா எழுதிய அந்தரங்க கடிதங்கள்...அதன் மதிப்பு இவ்வளவா?
இளவரசி டயானா எழுதிய கடிதங்கள் விரைவில் ஏலத்திற்கு விடப்பட உள்ளன.
இளவரசி டயானா
மறைந்த இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் விடுமுறை வாழ்த்து அட்டைகள் வருகிற 27-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளன. 1981-ம் ஆண்டு தொடங்கி 1985-ம் ஆண்டு வரையிலான 14 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள்
மற்றும் உணர்வுபூர்வமாக அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் ஏலத்திற்கு வருகிறது. இளவரசர் சார்லசை மணந்த பிறகு இருவருக்கிடையே எழுதிக்கொண்டு கடுத்தங்களும் இதில் அடங்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஏலம் பெவர்லி ஹில்சில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
அந்தரங்க கடிதங்கள்
இதில் 1982-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி எழுதப்பட்ட ஒரு கடிதம் அவரது தேனிலவு பயணத்தின் மகிழ்ச்சிகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல மற்றோரு கடிதத்தில், தாய்மை உணர்வில் உச்சகட்ட மகிழ்ச்சியில் இளவரசி டயானா, இளவரசர் வில்லியம் பிறந்த பிறகு தன்னை மிகவும் பெருமைப்படக்கூடிய
மற்றும் அதிர்ஷ்டசாலியான தாய் என்று விவரிக்கிறார். மேலும், குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கான தனது ஆர்வத்தையும் அதில் வெளிப்படுத்தியுள்ளார். இதை தொடர்ந்து, கடந்த 1983ம் ஆண்டு ஹெலிகாப்டரில் இருந்தபடி கையசைத்து விடைபெற்றது குறித்து அவர் விவரித்த 2 பக்கங்களுக்கு மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படியாக டயானா தானது கையால் எழுதிய செய்திகள், தனிப்பட்ட விஷயங்கள், வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் மற்றும் மைல்கற்களை அவரது கடிதங்கள் எளிமையாக வெளிப்படுத்துகிறது. இவை அனைத்தும் ஏலத்திற்கு வந்தால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.