இளவரசி டயானாவின் முன்னாள் காதலர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹெவிட், ஆண்டுக்கு 4,000 பவுண்டுகள் ஊதியத்திற்கு தோட்டக்காரராக பணியாற்றிவரும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 62 வயதாகும் ஹெவிட், தாம் குதிரைப்படை அதிகாரியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில், 1986 முதல் சுமார் 5 ஆண்டு காலம் இளவரசி டயானாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
தமது வயதான தாயாருடன் தற்போது வசித்துவரும் ஹெவிட், அதே கட்டிடவளாகத்தில் ஆண்டுக்கு 4,000 பவுண்டுகள் ஊதியத்திற்கு தோட்டக்காரராக பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், ஹெவிட் ஒன்றும் குறிப்பிடும்படியான தோட்டக்காரர் அல்ல எனவும், பழமையான ஒரு யூ மரத்தை ஒழுங்கு படுத்தி ஒயின் கிளாஸ் போல வடிவமைப்பதாக கூறி அந்த மரத்தை சிதைத்துள்ளார் எனவும் அப்பகுதி மக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த மரத்தை பாழாக்கியது தொடர்பில் அவருடன் வாக்குவாதம் ஏற்படும் அளவுக்கு பிரச்சனை எழுந்தது எனவும் அந்த குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகள் பழமையான யூ மரத்தை, வேலை தெரியாமல் நாய்களுக்கு அளிக்கும் உணவு போல ஹெவிட் சீரழித்து வைத்துள்ளார் என இன்னொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜேம்ஸ் ஹெவிட் உடனான தமது நெருக்கத்தை 1995ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆவணப் படம் ஒன்றில் இளவரசி டயானா ஒப்புக்கொண்டிருந்தார். தங்கள் இருவருக்கும் இடையேயான உறவு என்பது நட்புக்கும் கொஞ்சம் மேலானது என அந்த ஆவணப்படத்தில் டயானா குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் ஹெவிட்டின் தாயாருக்கு சொந்தமான இல்லம் ஒன்றிலேயே டயானாவுடன் சந்திப்பு நிகழ்வதாகவும், அங்குள்ள படுக்கை அறைக்கு மட்டுமே அந்த ரகசியம் தெரியும் எனவும் டயானாவின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்ட Ken Wharfe எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி, இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை ஜேம்ஸ் ஹெவிட் என்ற வதந்திக்கு பல காலமாக அவர் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.