கேட் தோழியுடன் தொடர்பில் இங்கிலாந்து இளவரசர்? தீயாய் பரவும் தகவல்!
இளவரசர் வில்லியம் ரோஸ் ஹான்பரியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தகவல் பரவியுள்ளது.
இளவரசர் வில்லியம்
இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டனின் முன்னாள் நெருங்கிய தோழி ரோஸ் ஹான்பரி இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல் ஒன்று பரவி விவாதப்பொருளாகியுள்ளது. இந்த தகவலை ஸ்டீபன் கோல்பர்ட் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டீபன், "இங்கிலாந்தின் இளவரசி கேத் மிடில்டன் வெளியில் வராததால், வருங்கால மன்னர் வில்லியமுக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று இணையவாசிகள் யூகிக்கிறார்கள்.
அந்த பெண் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என நினைக்கிறேன். வில்லியம் மற்றும் ரோஸ் ஹான்பரி இடையே தொடர்பு இருப்பதாக 2019 முதல் வதந்திகள் உள்ளன. பின்னர் ரோஸ், வில்லியமின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டேவிட்டை திருமணம் செய்துகொண்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
ரோஸ் ஹான்பரியுடன் தொடர்பு
இதனைத் தொடர்ந்து, கோல்பர்ட் மற்றும் ரோஸ் ஹான்பரி இருவரின் பெயர்களும் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகியுள்ளது. ஆனால், இந்த தகவல் தொடர்பாக ஹான்பரி, கேத் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலோ அல்லது மறுப்போ வெளியிடப்படவில்லை.
இருப்பினும், வில்லியமின் சட்டக்குழுவினர் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவை ஆதாரமற்றவை என்றும், தீங்கு விளைவிக்கும் நோக்கில் பரப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.