கேலக்ஸி டூர் வேண்டாம்யா.. முதல்ல பூமிய காப்பாத்துங்க : பிரிட்டன் இளவரசர் வில்லியம்

விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு , பூமியை காப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என பிரிட்டன் இளவரசர் வில்லியம் கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர்களும் , தொழிலதிபர்களும் விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக அமேசான் நிருவனர் , ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை விண்வெளி சுற்றுலாவினை துவங்க இருப்பதாக தகவல் வெளியான  நிலையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பிரிட்டன் இளவரசர் வில்லியம் கூறுகையில்உலகில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தவர்கள் ,

மனித வாழ்வுக்கு மற்றொரு கிரகத்தை தேடாமல் நமது பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என  வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்