ஹாரியின் சுயசரிதை: திடுக்கிடும் மர்மங்கள் - ஒரேநாளில் 1 மில்லியன் புத்தகங்கள் விற்பனை!
இளவரசர் ஹாரியின் சுயசரிதை ஒரே நாளில் 1 மில்லியன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சுயசரிதை
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் பல விவகாரங்களால் அரச பதவிகளிலிருந்து விலகினர்.
இந்நிலையில், இளவரசர் ஹாரி ‘ஸ்பேர்’ என்ற தலைப்பில் தமது சுயசரிதையை எழுதியுள்ளார். 16 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹேரி அரச வாழ்க்கையிலிருந்து விலகியது ஏன்? எதற்காக அமெரிக்கா சென்றார்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் அதில் உள்ளன.
1 மில்லியன்
சகோதரர் வில்லியம்ஸ் தனது கழுத்தை பிடித்து தாக்கி தரையில் தள்ளியதாக இளவரசர் ஹாரி எழுதியுள்ளது ஏற்கனவே சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தனது அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே தான் வளர்க்கப்பட்டதாக கூறியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்தப் புத்தகம்ஒரே நாளில் 1.4 மில்லியன் புத்தகங்கள் இங்கிலாந்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாந் நாடுகளில் மட்டும் 1.4 மில்லியன் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.