அரச குடும்பத்தில் மீண்டும் இணைய ஹாரி முயற்சி? பரவும் தகவல்!
இங்கிலாந்து அரச குடும்பத்தில் மீண்டும் இணைய ஹாரி முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹாரி
பிரிட்டன் அரசர் சார்லஸின் மகனான ஹாரி, 2020-ம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார்.
தற்போது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மனைவி மேகன் மார்க்கல், குழந்தைகள் ஆர்ச்சி, லில்லிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
குடும்பத்துடன் இணைய முயற்சி?
இனரீதியாக மேகனை அரச குடும்பத்தினர் டார்கெட் செய்ததும், அதன் காரணமாக ஹாரிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமும்தான், சொந்த நாட்டையே அவர் மாற்றிக் கொள்ளக் காரணமாக அமைந்திருக்கிறது எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், அரச குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்க ஹாரி முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் தனது முன்னாள் ஆலோசகர்களின் உதவியை நாடி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், ரச குடும்பத்தில் முழுமையாக திரும்புவதை அவர் நோக்கமாக கொண்டிருக்கவில்லை எனவும் தெரியவருகிறது.