மன்னர் சார்லஸூக்கு புற்றுநோய்; அரண்மனை தகவல் - அவசரமாக லண்டன் திரும்பும் ஹாரி?
மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.
மூன்றாம் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்(73) ஏற்கனவே புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சையில் இருந்து வந்தார். சமீபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு இன்னொரு வகை புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்மையில் சிகிச்சையின் போதுதான் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், எந்த வகை புற்றுநோய் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
புற்றுநோய் பாதிப்பு
எனவே, அவர் வழக்கமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள உள்ளார். சார்லஸ் சிகிச்சை குறித்து முற்றிலும் நம்பிக்கையுடன் இருக்கிறார். கூடிய விரைவில் முழுமையான பணிக்குத் திரும்புவார் என பக்கிங்காம் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இளவரசர் ஹாரி தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளதாகவும், விரைவில் லண்டன் திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.