அம்மாவின் மரணத்தினால் அதிக மது குடித்தேன்!" - மனம் திறந்த இளவரசர் ஹாரி
தனது தாயார் டயானாவின் மரணம் தனக்கு கொடுத்த அதிர்ச்சியினால் மதுவுக்கு அடிமையாகி கிடந்தேன் என The Me You Can't See ஆவணப்படத்தில் முன்னாள் பிரிட்டன் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளை துறந்த இளவரசர் ஹாரியின் தாயார் டயானா 1997இல் கார் விபத்தில் உயிரிழந்தார் இந்த சம்பவம் உலல அளவில் பேசு பொருளானது.
இந்த நிலையில் 'The Me You Can't See ஆவணப்படத்திற்கு பேட்டியளித்துள்ள ஹாரி.
என்னால் அப்போது எந்த உதவியும் அம்மாவுக்கு செய்ய முடியாமல் போனதை எண்ணின் நான் வருந்தினேன்.
எனது தாயருக்கு நடந்த விபத்தை எண்ணி எனக்கு கோபம் வந்தது. இன்னம் சொல்லப்ப்போனால் அப்போது நான் சிறுவனாக இருந்ததால் என் மீது கேமிராவின் பிளாஷ் வெளிச்சம் எனது மனதை பாதித்தது.
எனது தாயாரின் மரணத்தை எண்ணி எண்ணி மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானேன் சிலசமயங்களில் போதை மருந்துகளை கூட எடுத்துக் கொண்டேன்.
ஏன் என்றால் அது எனது உணர்ச்சிகளையும் மன அழுத்தத்தையும் குறைப்பதாக கருதினேன்.
ஒரு கட்டத்தில் சுயக் கட்டுப்பாட்டுடன் குடிப்பதை கண்ட்ரோல் செய்தேன். ஆனால் வாரம் முழுவதும் குடிக்காமல் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் குடித்து தீர்த்தேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்தை விட்டு விலகி தனது மனைவி மேகன் மார்க்கெல் உடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.