பிரதமர் மோடி யார் கையை பிடித்து உயர்த்தினாலும் அவர்களுக்கு வெற்றி உறுதி- எல்.முருகன்

admk dmk bjp congress
By Jon Feb 18, 2021 02:16 AM GMT
Report

பிரதமர் மோடி யார் கையை பிடித்து உயர்த்தினாலும் அவர்களுக்கு வெற்றி உறுதி என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், வரும் 21ம் தேதி சேலத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வரும் 25ம் தேதி கோவைக்கு பிரதமர் மோடியும் வருகை தர இருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவை தேர்தலை, பாஜக முக்கிய தேர்தலாக நினைத்து பணியாற்றி வருகிறது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக, இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை கண்டிப்பாக குறையும். பிரதமர் மோடி யார் கையை பிடித்து உயர்த்தினாலும் அவர்களுக்கு உறுதியான வெற்றிதான் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Gallery