விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் - தாயாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி!
ரிஷப் பந்த்தின் உடல் நிலை குறித்து அவரது தாயாரிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
ரிஷப் பந்த் உடல் நிலை
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் வந்த கார் சாலையின் நடுப்பக்கம் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி பற்றி எரிந்துள்ளது. இதில் ரிஷப்பின் முதுகு, கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில்,

‘கார் விபத்தில் காயமடைந்துள்ள ரிஷப் பந்த் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்து குறித்து அவரது குடும்பத்தினரிடமும், மருத்துர்களிடமும் பேசினேன். ரிஷப்பின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நலம் விசாரித்த மோடி
ரிஷப்பின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை நாங்கள் கவனித்து வருகிறோம். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி, ரிஷப் பந்த் உடல்நிலை குறித்து அவரது தாயார் சரோஜ் பந்த்திடம் நலம் விசாரித்தார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது அறிந்து கவலைக்குள்ளானேன். அவர் நலன் அடையவும் நல்ல ஆரோக்கியத்துக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.