ஆடி கிருத்திகை...முருகப்பெருமான் அருள் கிடைக்கட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil nadu Narendra Modi
By Sumathi Jul 23, 2022 10:27 AM GMT
Report

ஆடிக்கிருத்திகை நாளான இன்று, முருகப்பெருமானின் அருள் கிடைக்கட்டும் என பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 ஆடிக்கிருத்திகை

தமிழ்நாட்டின் சிறப்பான நிகழ்வுகளில் ஒன்றாக ஆடிக்கிருத்திகை பண்டிகை உள்ளது. முருகப்பெருமானுக்கு உகந்த தினமாக பக்தர்கள் வழிபடும் ஆடி மாத கார்த்திகை நட்சத்திர நாள், இன்று மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடி கிருத்திகை...முருகப்பெருமான் அருள் கிடைக்கட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து! | Prime Minister Modi Said Greetings In Tamil

பிரதமர் மோடி 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில்,

'ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்' என தெரிவித்துள்ளார்.