ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன பிரதமர் மோடி... அதிர்ச்சியில் தொண்டர்கள்

Narendra Modi
By Petchi Avudaiappan Apr 29, 2022 03:42 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

100 சீக்கிய தலைவர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடியின் மாற்றத்தைக் கண்டு தொண்டர்களே ஒரு கணம் ஆச்சரியப்பட்டனர். 

சண்டிகர் பல்கலைக்கழக வேந்தர் சட்னம் சிங் சந்து தலைமையிலான 100 சீக்கிய தலைவர்களுடனான சந்திப்பு கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் விழா மேடையில் அமர்ந்திருந்தார். 

பொதுவாக வெவ்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது அந்த மாநில மக்களின் கலாச்சார உடைகளை பிரதமர் நரேந்திர மோடி அணிவது வழக்கம். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவும்.அந்த வகையில் இன்று நடைபெற்ற சீக்கிய தலைவர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி சிவப்பு நிற டர்பன் அணிந்து கலந்துகொண்டார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய  பிரதமர் மோடி, சீக்கியர்களுக்கும் தனக்கும் இருக்கும் நெருக்கம் குறித்தும், சீக்கியர்களின் புனித தலங்களான குருத்வாராவுக்கு தான் அடிக்கடி சென்று வருவது குறித்தும் நினைவு கூர்ந்தார். மேலும் சீக்கியர்களோடு இணைந்து வாழ்வதே தனது வாழ்க்கை பயணத்தின் ஒரு அங்கம் என்றும் அவர் தெரிவித்தார். 

சீக்கிய குருக்கள் தங்களின் முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணித்து இருக்கின்றனர். நாட்டின் சுதந்திரத்துக்காகவும், சுதந்திரத்துக்கு பின்னரும் சீக்கிய சமுதாயம் ஆற்றிய பங்கிற்கு இந்தியா நன்றிக்கடன்பட்டு இருக்கிறது எனவும் மோடி குறிப்பிட்டார். 

ஜாலியன் வாலா பாக்கில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட சீக்கியர்களை நினைவுகூர்ந்த அவர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடியுரிமை பெற்ற சீக்கியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.