9 வருஷம்; 1 நாள் கூட லீவு எடுக்காத பிரதமர் மோடி - சுடச்சுட தகவல்!
பிரதமர் மோடி தனது பணியில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 2019 மே 30ம் தேதியன்று 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக 2014 முதல் 2019 வரையில் இந்திய பிரதமராக மோடி இருந்தார்.

இந்நிலையில், பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு ஆர்டிஐ மூலம் கேள்வி ஒன்று கோரப்பட்டிருந்தது. அதற்கு ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை.
ஆர்டிஐ தகவல்
பிரதமர் மோடி எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார் என பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

"பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் பணியாற்றுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததேயில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை IBC Tamil