ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்; பதவி உயர்வு - அன்பில் மகேஷ் அறிவிப்பு

Anbil Mahesh Poyyamozhi trichy
By Sumathi Dec 29, 2023 07:28 AM GMT
Report

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 பதவி உயர்வு

திருச்சி, முசிறி அருகே தொட்டியத்தில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 67ஆவது தேசிய அளவிலான, 17 வயது பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி நடைபெற்று வருகிறது.

tamilnadu govt teachers

இப்போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு மாணவிகளை வாழ்த்தி உரையாற்றினார். பின்பு மாணவிகளுக்கு டி ஷர்ட் மற்றும் வாலிபால் ஆகியவற்றை பரிசாக அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடனுதவி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடனுதவி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

அமைச்சர் அறிவிப்பு

"தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு பல மாநிலங்கள் தயங்குகின்றன எனவும் காரணம் அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகளையும் கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

minister anbil mahesh

அந்த வகையில், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் விளையாட்டு துறையில் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தேசிய அளவிலான போட்டிகளை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமைப்படி பதவி உயர்வு வழங்குவது போல

ஒன்றிய அளவில் வழங்கப்பட்டு வருகின்ற தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு வழங்கும் ஆணை தமிழக முதல்வரின் ஒத்துழைப்போடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.