ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடனுதவி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை செயல்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
இந்த கடன் உதவு ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக் அல்லது கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும். மேலும் இந்த கடன் உதவி ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு மிகக் குறைந்த வட்டி தான் அவர்களிடம் இருந்து பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை
ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.