அர்ச்சகர்கள் நியமனம்.. அரசு விதிகள் செல்லுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Tamil nadu
By Sumathi Aug 22, 2022 06:50 AM GMT
Report

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அர்ச்சகர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ள கோவில்களில் 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அர்ச்சகர்கள் நியமனம்.. அரசு விதிகள் செல்லுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு! | Priests In Tamilnadu Temples Madras High Court

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

தமிழ்நாடு அரசு 

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்தது. குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில்,

அர்ச்சகர்கள் நியமனம்.. அரசு விதிகள் செல்லுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு! | Priests In Tamilnadu Temples Madras High Court

அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும்,

அரசு விதிகள் செல்லும்

பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகம விதிகள் படித்தவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்குகளின் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதில், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்றும், எந்தெந்த கோவில்களில் எந்தெந்த ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன என்பதை கண்டறிய 5 பேர் கொண்ட குழு நியமிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.