பட்டியலின சிறுவனைக் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய அர்ச்சகர் - வைரலாகும் வீடியோ!

Viral Video Child Abuse Madhya Pradesh
By Sumathi 2 மாதங்கள் முன்

அர்ச்சனை தட்டில் இருந்த பாதாம் பருப்பை எடுத்த பட்டியலின சிறுவனைத் அர்ச்சகர் தாக்கும் வீடியோ பரவி வருகிறது.

பட்டியலின சிறுவன்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஹர் பகுதியில் ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிறுவனை அர்ச்சகர் மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளார்.

பட்டியலின சிறுவனைக் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய அர்ச்சகர் - வைரலாகும் வீடியோ! | Priest Tied Up The Listed Boy And Beat Him

சிறுவன் கதறி அழுததுடன் தன்னை விட்டுவிடும்படி கதறியுள்ளார். இதனிடையே சிறுவனை விட்டுவிடும்படி, அர்ச்சகரிடம் ஒருவர் அறிவுறுத்திய போது, உன் வேலையை மட்டும் பார் என்று ஆவேசமாக கூறுகிறார்.

தாக்கிய அர்ச்சகர்

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அர்ச்சகரின் தட்டில் இருந்த பாதாம் பருப்பை எடுத்த பட்டியலின சிறுவனை அர்ச்சகர் கட்டி வைத்து அடித்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த அர்ச்சகர் மீது மோதி நகர் போலீஸார், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வகுப்பதிவு செய்து கைது செய்தனர்.