கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக பாதிரியார் - ஆபாச வீடியோவால் தப்பிக்க தில்லுமுல்லு!

Tamil nadu Viral Video Sexual harassment Kanyakumari
By Sumathi Mar 15, 2023 05:02 AM GMT
Report

ஆபாச வீடியோவில் சிக்கிய பாதிரியார் வேறு சர்ச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

தக்கலை அருகே உள்ள சர்ச் பாதிரியார் பெனடிக்ஆன்றோ. இவரது சமீபத்தில் இவரை தாக்கிய கும்பலில் அவரது லேப்டாப்பை பறித்துச் சென்றதாக சட்டகல்லூரி மாணவர் மீது புகார் கொடுத்தனர். அதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக பாதிரியார் - ஆபாச வீடியோவால் தப்பிக்க தில்லுமுல்லு! | Priest Sexual Harassment Video Kanyakumari

இந்நிலையில், கல்லூரி மாணவி ஒருவருடன் அந்த பாதிரியார் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இது சர்ச்சையாக வெடித்த நிலையில் பங்கு தந்தையை வேறு இடத்துக்கு மாற்றி பிஷப் அலுவலகம் உத்தரவிட்டது.

சிக்கிய பாதிரியார்

இதற்கிடையில், மாணவர் ஆஸ்டின் ஜியோவின் தாய் புகாரளித்துள்ளனர். அதில், பாதிரியார் இளம்பெண்ணை பாலியல் தொல்லை செய்ததால் அவர் தற்கொலை முடிவில் இருப்பதாகவும், அதனைக் கேட்ட மகன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரத்திலிருந்து தப்பிக்க பாதிரியார் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.