சிக்கியது சிவசங்கர் பாபாவின் ஆபாச வீடியோ - மிரண்டு போன போலீஸ்!
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய வீடியோ ஒன்று சிக்கியுள்ளதால் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனை நடத்தி வரும் சிவசங்கர் பாபா அங்கேயே ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். தான் நடத்தி வரும் பள்ளியை சேர்ந்த மாணவிகளையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\
இதுதொடர்பாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர் இந்த நிலையில் இன்று சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாராணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்தையை இழந்த ஏழை பிள்ளைகளுக்கு சிவசங்கர் பாபா ஆதரவு அளித்துள்ளார்.
இவர்களைத் தான் குறிவைத்து செயல்பட்டு வந்துள்ளார். ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடக்கும் பூஜைகளின் போது மாணவிகளை பங்கேற்க வைத்து பாலியல் துன்புறத்தல்கள் அளித்திருக்கிறார்.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதைப் பார்க்க மிகவும் பயங்கரமாக இருப்பதாகவும், இது ஓராண்டிற்கு முன்பு பவுர்ணமி நாளில் எடுக்கப்பட்டது எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.